எஸ்.பேண்ட் ஒப்பந்தம் ரத்து
இஸ்ரோவின் எஸ்.பேண்ட் அலைவரிசை, தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விண்வெளி கமிஷன் விசாரணை நடத்தி தேவாஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கேபினட் பாதுகாப்பு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது. இதன் மீது முடிவு எடுக்க கேபினட் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. அப்போது தேவதாஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட இஸ்ரோவின் எஸ்.பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.