விலகினார் முபாரக்
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் (வயது82) பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் கடந்த 18 நாட்களாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர். இந்த நிலையில் அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகி விட்டதாகவும் அதிபர் பொறுப்பினை ராணுவ கவுன்சிலிடம் ஒப்படைத்திருப்பதாகவும் துணை அதிபர் ஒமர் சுலைமான் அரசு தொலைக்காட்சி மூலம் அறிவித்தார். இதைக் கேட்டதும் எகிப்து மக்கள் வீதிக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். முபாரக் தனது குடும்பத்தினருடன் எகிப்தை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.