Saturday, February 12, 2011

13வது பேரவை நிறைவு

பதிமூன்றாவது தமிழக சட்டப் பேரவையின் கடைசி கூட்டம் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் அணி பெரும்பான்மை பெற்றதையடுத்து 13-வது சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதுவரை மொத்தம் 15 கூட்டங்கள் நடத்தப்பட்டன. புதிய சட்டப் பேரவை மண்டபத்தில் 2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட பேரவை 226 நாட்கள் நடந்தன. மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP