Saturday, February 12, 2011

தமிழர் நல வாரியம்

தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர் நலனுக்காக ‘தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம்’ தொடங்குவதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசிப்போர், வெளிநாடுகளில் வசிப்போர் என இரு பிரிவாக இந்த வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம். வெளிநாடுகளில் வாழ்வோர் மாதம் ரூ.300-ம்,வெளி மாநிலங்களில் வாழ்வோர் மாதம் ரூ.100-ம் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும்.
இந்த இரு பிரிவினரும் திரும்ப தமிழகத்திற்கு வந்துவிட்டால் பிறகு மாதம் ரூ.50 செலுத்த வேண்டும்.வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், இறப்பின் பேரில் குடும்ப ஓய்வூதியம், உடல் ஊனமுற்றால் உதவித் தொகை, நோயுற்றால் நிதி உதவி, பெண் உறுப்பினர்களின் மகள்களுக்கு திருமண உதவி, பெண் உறுப்பினருக்கு பேறுகாலச் சலுகை, வீடு கட்ட, வீடு பராமரிக்க, கல்விக் கடன் முன்பணம் போன்ற உதவிகள், சுயவேலை வாய்ப்பைத் தேட உதவி போன்ற திட்டங்கள் இந்த வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் உறுப்பினராகச் சேர பதிவுக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும். 18 வயது நிறைவடைந்த, 55 வயது நிறைவடையாதோர் இதில் உறுப்பினராகச் சேரலாம். இந்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததை தொடர்ந்து மசோதா நிறைவேறியது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP