பிஎஸ்என்எல்- ஐஎஸ்ஓ
இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் தமிழ்நாடு சர்க்கிள் மொபைல் சேவைக்கு ஐஎஸ்ஓ 9001 : 2008 தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் உயர் அதிகாரி முகம்மது அஷ்ரப் கான் தெரிவித்துள்ளார். தற்போது பி.எஸ்.என்.எல் 1500 மொபைல்போன் டவர்கள் மூலம் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கி வருவதாகவும், மார்ச் மாத இறுதிக்குள், புதிதாக டவர்கள் அமைக்கப்பட்டு, சேவையை இன்னும் மேம்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவி்த்துள்ளார்.