எஸ்-பாண்ட் விசாரணைகுழு
எஸ்-பாண்ட் அலைக்கற்றையை தனியார் நிறுவனத்துக்கு இஸ்ரோ ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க இருநபர் உயர்நிலைக் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். முன்னாள் அமைச்சரவைச் செயலரும் தற்போதைய திட்டக்குழு உறுப்பினருமான பி.கே.சதுர்வேதி தலைமையிலான இந்தக் குழுவில், வானியல் நிபுணரும் விண்வெளி ஆணைய உறுப்பினருமான ரோதம் நரசிம்மாவும் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழு தனது விசாரணையை முடித்து ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.