நேபாள புதிய பிரதமர்
நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலாநாத் கானல் (60) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 601 உறுப்பினர்களை உள்ளடக்கிய நேபாள நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 557 வாக்குகள் பதிவாகின. இதில் 368 வாக்குகளை ஜலாநாத் கானல் பெற்று வெற்றி பெற்றார். நேபாளத்தின் பிரதமராக இருந்த மாதவ் குமார், மாவோயிஸ்ட்டுகளின் நெருக்குதலால் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி பதவியை ராஜிநாமா செய்ததை தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது.