சுங்லு கமிட்டி அறிக்கை
டெல்லியில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் நிகழ்ச்சிகளை டெலிவிஷனில் ஒளிபரப்புவதற்கு உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது விசாரணையை முடித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 236 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.