150 ரூபாய் நாணயம்
150 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரித்துறை தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.