கடாஃபி மறுப்பு
டுனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் மக்கள் கிளர்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவற்றின் பக்கத்து நாடான லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லிபியாவை கடாஃபி 40ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். லிபியா அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பல்வேறு இடங்களில் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கடாஃபி நாட்டை விட்டு வெனிசுலாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியது. இதனை கடாஃபி மறுத்துள்ளார். அரசுத் தொலைக்காட்சியில் தோன்றிய கடாஃபி, தான் திரிபோலியில்தான் (லிபியாவின் தலைநகர்) இருப்பதாகவும், வெனிசூலாவில் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.