சின்னத்திரை விருதுக் குழு
தமிழக அரசின் 2009-2010 ஆம் ஆண்டுகளுக்குரிய சின்னத்திரை விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணிசுப்பு, தயாரிப்பாளர் டி.வி.சங்கர், நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் .ராஜசேகர், நடிகை நித்யா ரவீந்தர் ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாகவும், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.