திரைப்பட மானியக்குழு
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்குவதற்காக நீதிபதி பொன்.பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணன், சென்னைத் தொலைக்காட்சி நிலைய ஓய்வுபெற்ற இயக்குநர் நடராஜன், நடிகர் வாகை சந்திரசேகர், நடிகை சரோஜா தங்கவேலு, நடிகை ஸ்ரீபிரியா, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலர், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர், வணிகவரித் துறை இணை ஆணையர், உள்துறை துணைச் செயலர் (சினிமா), எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.