போளூர் வரதன் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை மேடவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போளூர் வரதன் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் செங்கம் தொகுதியில் வெற்றிபெற்றவர். 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.