Thursday, January 13, 2011

இளைஞர் எழுச்சி தினம்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி இளைஞர் எழுச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘சுவாமி விவேகானந்தர் இந்திய சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரியது. இந்தியாவின் புகழை உலக அரங்கில் நிலைநிறுத்திய அவரது 150-வது பிறந்தநாள் அடுத்த ஆண்டு வருகிறது. இது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் கொண்டாடப்படும். அவர் உரையாற்றிய சிகாகோவில் 150-வது பிறந்த தினம் இந்தியா சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்படும்’ என்றார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP