தொல்காப்பிய பூங்கா
சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, இனி தொல்காப்பிய பூங்கா என அழைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்து அவர் பேசுகையில், ‘தொல்காப்பியருக்குப் பின்னர்தான் வள்ளுவர் உள்ளிட்ட மற்ற ஞானிகள் எல்லாம் தமிழகத்தில் தோன்றி ஞானப்பால் வார்த்தார்கள். அடையாறு சூற்றுச்சூழல் பூங்காவுக்கு தமிழன் என்ற பெருமையோடு தொல்காப்பிய பூங்கா என பெயர் வைக்கிறேன்’ என்றார்.