ஆளுனர் உரை-அறிவிப்புகள்
13-வது தமிழக சட்டப்பேரவையின் 15-வது கூட்டத் தொடரை ஆளுநர் பர்னாலா 7-01-2011 வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். ஆளுனர் உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் விவரம்:
* 'மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி' என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரம், கடலூர்,திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்தி வருகிறது. பாரம்பரியம்மிக்க இந்திய மருத்துவத்தையும், ஹோமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க, இப்போதுள்ள 6 அரசு இந்திய மருத்துவ, ஹோமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி 'இந்திய மருத்துவ ஹோமியோபதி பல்கலைக்கழகம்' கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தருமபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 5 இடங்களில் புதிதாக கலை,அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் புதிதாக விவசாயக் கல்லூரி தொடங்கப்படும்.
* வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக்கலைக்காக தனியே, 'தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்' கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
* கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்
* அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஓசூரில் 1100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
* சென்னையில் 'அறிவியல் பெருநகரம்' அமைக்கப்படும்
* மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக மூலக்கடை-திருமங்கலம், மூலக்கடை-திருவான்மியூர், லஸ்-ஐய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்