Saturday, January 8, 2011

டி.என்.பி.எஸ்.சி தேர்வு நாட்கள் மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பதவியின் பெயர் மற்றும் அதற்கான புதிய தேர்வு நாட்கள் விவரம் (ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு நாள் அடைப்புக்குறிக்குள்):
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் கிராம நிர்வாக அலுவலர் பதவி: 20-02-2011 முற்பகல் (27-02-2011 முற்பகல்)
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் புள்ளியியல் உதவியாளர் பதவி: 26-02-2011முற்பகல் (19-02-2011 முற்பகல்)
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் வட்டார சுகாதார புள்ளியர் பதவி: 26-02-2011 பிற்பகல் (19-02-2011 பிற்பகல்)

கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையில் சிறப்பு உதவியாளர் பதவி: 6-03-2011 முற்பகல் (20-02-2011 முற்பகல்)
தொகுதி 1-க்கான முதனிலைத் தேர்வு: 5-06-2011 முற்பகல் (22-05-2011 முற்பகல்)
ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் 1-ல் அடங்கிய பதவிகளுக்கான (குரூப் 2) தேர்வு: 19-06-2011 முற்பகல் (12- 06-2011) முற்பகல்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP