Tuesday, January 4, 2011

தமிழ் வளர்ச்சி விருதுகள்

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோருக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டுக்கான “அய்யன் திருவள்ளுவர் விருது” - முனைவர் பா. வளன் அரசு, 2010-ம் ஆண்டின் சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” - கோ. சாமிதுரை ஆகியோர் பெறுகின்றனர்.
“அறிஞர் அண்ணா விருது” -. து.  ரவிக்குமார் எம்.எல்.ஏ, "அம்பேத்கர் விருது” -   திருமதி டி. யசோதா, எம்.எல்.ஏ., “பெருந்தலைவர் காமராசர் விருது” - திருமதி. ஜெயந்தி நடராஜன், எம்.பி., “பாரதியார் விருது” - நா. மம்மது, “தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது” - பேராசிரியர் அ. அய்யாசாமி, “பாவேந்தர் பாரதிதாசன் விருது” - முனைவர் இரா. இளவரசு, “முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது” - முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வருகிற 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்கி சிறப்பிப்பார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP