பொதுநுழைவுத்தேர்வு: உறுதி
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘மருத்துவ இளநிலை மற்றும் முதுகலை கல்வி சேர்க்கைக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது குறித்து நீங்கள் கடந்த 3-ந் தேதி எழுதிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் இந்திய மருத்துவ கவுன்சில் வருவதால், இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கைக்காக உங்கள் கடிதத்தை அந்தத் துறையின் அமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
மேலும், எந்த மாநிலத்தையும் கலந்து ஆலோசிக்காமல், என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை கொண்டு வரும் திட்டம் பற்றி முடிவு செய்ய மாட்டோம் என்பதற்கும், மாநில அரசுகளின் ஒத்துழைப்போடுதான் இந்த விஷயத்தில் செயல்படுவோம் என்பதற்கும் இதன் மூலம் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் கபில்சிபல்.