6000 பேருக்கு கூகுள் வாய்ப்பு
கூகுள் நிறுவனம் இந்தாண்டு புதிதாக 6000 பணியாளர்களை நியமிக்க உள்ளதாக கூறியுள்ளது. இது பற்றி கூகுள் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப்பிரிவின் துணைத்தலைவர் ஆலன் ஈஸ்டாக் கூறுகையில், ‘கூகுள் இணையதளத்திற்கு கடந்த 2010-ம் ஆண்டு முதற்கட்டமாக பொறியியல், விற்பனை பிரிவுக்கு 4,500 பேரை நியமித்தோம். இந்தாண்டு பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் அதிக வேலைப்பளு இருப்பதால் , நன்கு திறமையான தகவல் தொழில்நுட்பத்திறன் கொண்டவர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி 6000 பேரை புதிதாக நியமி்க்கவுள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.