5மொழி சேவை நிறுத்தம்
பிபிசி உலக சேவைப் பிரிவில் மொத்தம் உள்ள 32 மொழிகளில் 5 மொழிகளுக்கான சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பிபிசியின் தலைமை இயக்குநர் மார்க் தாம்ப்ஸன் வெளியிட்டுள்ளார். இதன்படி மாசிடோனிய, அல்பேனிய, செர்பிய மொழிச் சேவைகளும் கரிபீய பகுதிகளுக்கான ஆங்கிலப் பிரிவு, ஆப்பிரிக்காவுக்கான போர்த்துகீசிய மொழிப் பிரிவு ஆகியவை நிறுத்தப்படுகின்றன. இதனால் 650 பேர் பணியிழப்பார்கள் என கருதப்படுகிறது.