குடியரசு தின விருந்து
குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்று தேநீர் விருந்து அளித்தார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகல் தோட்டத்தில் இந்த விருந்து நடைபெற்றது. இதில் இந்தோனேஷிய ஜனாதிபதி பாம்பாங் யுதோயோனோ, பிரதமர் மன்மோகன்சிங், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சபாநாயகர் மீராகுமார், பாகிஸ்தான் தூதர் சவுகத் அஜீஸ், முப்படை தலைமை தளபதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் அதிகமான விருந்தினர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.