கல்மாதி நீக்கம்
தில்லி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாதி நீக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச்செயலர் பதவியில் இருந்து லலித் பனோத்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை விளையாட்டுத்துறை அமைச்சராக புதியதாக பொறுப்பேற்றுள்ள அஜய் மக்கன் மேற்கொண்டுள்ளார். அவர்கள் மீதான சிபிஐ விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.