ஜன 25- வாக்காளர் தினம்
இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இந்த தினத்தை வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. "வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்களிக்கத் தயார் என்பேன்!' என்ற முழக்கத்துடன் தேசிய வாக்காளர் தினம் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.