ஐ.டி.யில் 1.8 லட்சம் வாய்ப்பு
தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 12 மாதங்களில் ஐந்து முக்கிய முன்னணி நிறுவனங்களில் 1.6 லட்சம் முதல் 1.8 லட்சம் தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவைப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இன்போசிஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி வேகமாக ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. அயல் நாட்டு பணிகளை இந்தியாவிடம் ஒப்படைத்து நிறைவேற்றிக் கொள்ளும் வேலையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சுணக்கத்தில் இருந்த தகவல் தொழில்நுட்ப துறை தற்போது விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.