Sunday, January 23, 2011

ரஹ்மான்: கிரிஸ்டல் விருது

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது. உலகில் கலை மற்றும் இசையில் சாதனை படைத்ததற்காக ரஹ்மானுக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.
இம்மாநாட்டில் சுமார் 11 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசுத்துறை தலைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட 2500 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பொருளாதார மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல்நாத், மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், திட்டக் கமிஷன் துணை தலைவர் மாண்டேசிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP