Wednesday, January 12, 2011

உதவித்தொகை

எஸ்.எஸ்.எல்.சி, எச்.எஸ்.சி, பட்டப்படிப்பு ஆகியவற்றில் ஏதெனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்று வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அவர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு மேல் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் அதை புதுப்பித்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்கும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தனியார், அரசு அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமலும், அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தை சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கலாம். ஏற்கெனவே இந்த உதவித் தொகை பெறும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு பதிவு எண், உதவித்தொகை கோப்பு எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP