பேராசிரியர் பணி நேர்காணல்
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,024 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இப்போது முடிந்துள்ளன. இதனை தொடர்ந்து, இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்கள், இனசுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்பட்டு பாடவாரியாக நேர்காணலுக்கு பதிவஞ்சல் மூலம் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நேர்காணல் வரும் ஜனவரி 19-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஈ.வி.கே. சம்பத் மாளிகையில் நேர்காணல் நடைபெறும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, நகலெடுத்து இதில் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதள முகவரி: http://trb.tn.nic.in/