தட்டச்சு தேர்வுதேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பிப்ரவரி 20ஆம் தேதி கிராம நிர்வாக அதிகாரிகள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளதால் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதி நடக்கவிருந்த தட்டச்சுத் தேர்வுகள் பிப்ரவரி 26 மற்றும் 27ம் தேதிகளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு www.tndte.com என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.