ஆலோசகர் நியமனம்
மத்திய அரசுக்கு கொள்கைத் திட்டங்களில் ஆலோசனை வழங்க தனியார் துறையிலிருந்து சிலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டாடா கன்சல்டன்சியின் முன்னாள் தலைவர் எஸ்.ராமதுரை பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதுரைக்கு மத்திய கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து அளிக்கப்படும். ஆற்றல் மேம்பாடு குறித்த விஷயங்களில் இவர் பிரதமருக்கு ஆலோசனை வழங்குவார்.