Monday, January 31, 2011

எகிப்து கலவரம்

எகிப்து நாட்டு அதிபராக 30ஆண்டுகளாக பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக்கின் (வயது 82) ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இது பெரும் கலவரமாக மாறியுள்ளது. சமூக விரோதிகள் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொள்ளையடித்து வருகின்றனர். குடியிருப்புகளும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவையும் மீறி பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தனது அமைச்சரவையைக் கலைப்பதாக ஹோஸ்னி முபாரக் அறிவித்துள்ளார். துணை அதிபராக தனது நண்பரும் உளவுத் துறை தலைவருமான உமர் சுலைமானை நியமித்துள்ளார். விமான போக்குவரத்து அமைச்சர் அகமது ஷாபீக் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். முபாரக் ஆட்சிக்கு எதிராக ராணுவ வீரர்களும், நீதிபதிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வேலை வாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், ஊழல் ஆகியவற்றால் முபாரக் ஆட்சியின் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP