விமானப்படையில் தேஜஸ்
இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட 'தேஜஸ்' இலகுரக விமானம் இந்திய விமானப் படையிடம் முறைப்படி பெங்களூரில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இணைந்து இந்த இலகுரக விமானத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளன.
இதுதொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறுகையில், 'தேஜஸ் இலகுரக போர் விமானம் இந்தியாவின் 27 ஆண்டுகால கனவு திட்டம். அது நிறைவேறியதில் ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்பட வேண்டும்' என்றார்.