டி.என்.பி.எஸ்.சி தேர்வு தள்ளிவைப்பு
உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் கிரேட் 2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர் கிரேட் 2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய்துறை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு வருகிற ஜூன் 12ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்ததது. ஆனால் அன்றைய தினத்தில் ஐ.ஏ.எஸ் பதவிக்கான முதனிலை தேர்வை நடத்த மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. எனவே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவோர் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வினை எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.