நான்கு படைப்பிரிவுகள்
பொது அறிவு- வரலாறு: சங்க கால ஆட்சிமுறை
*சங்க காலத்தில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நான்கு படைப்பிரிவுகள் இருந்தன
*வில், அம்பு, குறுவாள் போன்றவை சங்க கால போர்வீரர்களின் ஆயுதங்கள் ஆகும்.*தலைநகரங்கள் கோட்டைகளாலும் அகழிகளாலும் பாதுகாக்கப்பட்டிருந்தன
*நிலவரி, வணிகவரி அரசின் முக்கிய வருவாய்களாக இருந்தன
* மொத்த உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது
* குறுநில மன்னர்கள் கட்டிய கப்பம், வழங்கிய பரிசுப்பொருட்களும் அரசின் பிறவருவாய்கள் ஆகும்
* சங்க காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மண்டலம், நாடு, வளநாடு, கூற்றம் என பிரிக்கப்பட்டிருந்தன
* கிராமங்கள் மூத்தோர் அடங்கிய அவைகளால் நிர்வகிக்கப்பட்டன
* அந்த அவைகள் மன்றம், பொதியில், அவை, அம்பலம் என அழைக்கப்பட்டன
(தொடரும்)