இந்தியாவில் சீனபிரதமர்
சீன பிரதமர் வென் ஜியாபோ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார். அவருடன் 400 தொழிலதிபர்களும் வந்துள்ளனர். இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம், காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனி விசா வழங்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகனுடன், வென் ஜியாபோ ஆலோசிக்க உள்ளார். மேலும் இந்தியா- சீனா இடையே பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. வென்ஜியாபோ வருகையைத் தொடர்ந்து சீனா இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.