டைம்- சிறந்த மனிதர்
உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (வயது 26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. அதன் அடிப்படையில் மார்க் ஜுக்கர்பெர்க் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் கலாசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை ஆண்டுதோறும் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது.