என்.எல்.சி. புதிய இயக்குநர்
என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய நிர்வாகத்துறை இயக்குநராக ஓரிசா மாநிலத்தைச் சேர்ந்த சரத்குமார் ஆச்சார்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தேசிய அனல் மின் நிறுவனத்தின் மனிதவளத்துறை பொது மேலாளராக பணியாற்றியவர்.என்.எல்.சி. நிறுவனத்தின் நிர்வாகத்துறை இயக்குநராக பணிபுரிந்த பி.பாபுராவ், கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார் சரத்குமார் ஆச்சார்யா.