சீனாவுடன் 6 ஒப்பந்தம்
இந்தியா வந்துள்ள சீன பிரதமர் வென் ஜியாபோவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளிடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பிரதமர் அலுவலகத்திலிருந்து சீன பிரதமருக்கு நேரடி தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்துவது. இரு நாடுகளும் இணைந்து ஆண்டுதோறும் மாநாடு நடத்துவது ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு தனித் தாளில் விசா வழங்கும் விவகாரத்தை சுட்டிக் காட்டிய சீன பிரதமர் வென்ஜியாபோ, இந்த பிரச்னையை இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகளே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என கூறினார்.