வி.ஏ.ஓ. கூடுதல் பணியிடம்
தமிழக அரசின் வருவாய் துறையில் 2,653 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. கிராம நிர்வாக அதிகாரி தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கூடுதலாக 831 காலி இடங்களும் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளன. காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதியவர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி கடைசி நாள் ஆகும்.