உலகக்கோப்பை கிரிக்கெட் உத்தேச அணி
பத்தாவது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2011 பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கான கிரிக்கெட் வாரிய கூட்டம் மும்பையில் நடந்தது. தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். இதில் 30 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டது. அணியில் டிராவிட், இர்பான் பதான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
சதீஸ்வர் புஜாரா, ரஹானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 30 பேரில் இருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். உத்தேச அணியில் தற்போது இடம் பெற்றுள்ளவர்கள்: டோனி, ஷேவாக், தெண்டுல்கர், கவுதம் கம்பீர், விராட் கோக்லி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெஹ்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், இஷாந்த் ஷர்மா, வினய்குமார், எம்.விஜய், ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, சவுரவ் திவாரி, யூசுப் பதான், பார்த்தீவ் பட்டேல், அஷ்வின், விர்த்மான் சாஹா, தினேஷ் கார்த்திக், ஷிகார் தவான், அமித்மிஸ்ரா, பியுஷ் சாவ்லா, புஜரா, பிரக்யான் ஓஜா மற்றும் பிரவீன்குமார்.