50-வது சதம் அடித்த சச்சின்
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 50-வது சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இது இவருக்கு 175-வது டெஸ்ட் போட்டி ஆகும். ஒருநாள் போட்டியிலும் 46 சதங்கள் அடித்துள்ள சச்சின், 50-வது சதத்தை நோக்கி இன்னொரு சாதனைக்கு பயணித்து வருகிறார்.