நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது
2010-ஆம் சாகித்ய அகாடமி விருதுக்கு தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது "சூடிய பூ சூடற்க'' என்ற சிறுகதை தொகுப்புக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில்நாடன் வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தவர். இயற்பெயர் சுப்ரமணியன். நகைச்சுவையும் சமூக விமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை இவரது முக்கிய அடையாளம். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருபவர். "தலைகீழ்விகிதங்கள்" இவரது முதல் நாவல். இதையே தங்கர்பச்சான் 'சொல்ல மறந்த கதை' என்ற பெயரில் திரைப்படமாக்கினார்.