பேராசிரியர் பணியிடங்கள்
சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் திண்டிவனம், விழுப்புரம், ஆரணி, காஞ்சிபுரத்தில் உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் எட்டு பேராசிரியர்கள், 34 இணை பேராசிரியர்கள் மற்றும் 63 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு இம்மாதம் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்களை www.annatech.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்