சாய்னா சாம்பியன்
இந்திய வீராங்கனை சாய்னா நெவால் ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். 16-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஷிக்ஷியான் வாங்-ஐ வென்று பட்டத்தைத் தட்டிச்சென்றார்.
இது இந்த ஆண்டில் சாய்னா வெல்லும் மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம் ஆகும். சிங்கப்பூர், இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பட்டங்களை ஏற்கனவே சாய்னா பெற்றுள்ளார்.