பில்லியர்ட்ஸ், செஸ் நீக்கம்
2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பில்லியர்ட்ஸ், செஸ் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. கபடி, கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில், மொத்தம் 42 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் மற்றும் செஸ் உட்பட 6 போட்டிகள் நீக்கப்பட்டு, 36 பிரிவுகள் மட்டும் இடம் பெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.