நோபல் அமைதி விருது
2010-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருதுக்கு சீனாவின் ஜனநாயகப் போராட்டத் தலைவர் லியூ ஜியாபோ தேர்ந்தெடுக்கப்பட்டார். விருது வழங்கும் விழா நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என பல்வேறு நாடுகளை சீனா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
இதில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்பட 46 நாடுகள் கலந்து கொண்டன. சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்பட 15 நாடுகள் புறக்கணித்தன. லியூ ஜியாபோ சிறையில் உள்ளதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. லியூ ஜியாபோ சார்பில் வேறு யாரும் பங்கேற்கவில்லை. விழாவில் லியூ ஜியாபோவுக்கு விருதை அளித்து கௌரவிப்பதாக நோபல் கமிட்டியின் தலைவர் தோர்ப்ஜோன் ஜக்லேண்ட் அறிவித்தார். லியூ ஜியாபோ அமைதி வழியில் மனித உரிமைக்காகப் போராடி வருகிறார். அஹிம்சையின் அடையாளமாகத் திகழும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என தோர்ப்ஜோன் கேட்டுக்கொண்டார்.