Friday, December 24, 2010

இலக்கியத்தின் தலைநகரம்

பொது அறிவு- வரலாறு
சங்க கால தமிழ் அரசுகள்: பாண்டிய அரசு
(மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியது)
தலைநகரம்- மதுரை
துறைமுகம்- கொற்கை
சின்னம்- மீன்
* மாறன், வழுதி, செழியன் போன்ற பெயர்களால் பாண்டிய மன்னர்கள் அழைக்கப்பட்டனர்
* தமிழ்ச்சங்கத்தை போற்றி வளர்த்தனர்
* தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் தலைநகரமாக மதுரை விளங்கியது
புகழ்பெற்ற மன்னர்கள்:
* முதுகுடுமிப் பெருவழுதி- தனது வெற்றிகளைப் போற்றும் வகையில் பல வேள்விகள் செய்தான். பல்யாக சாலை என்று சிறப்புப்பெயர் பெற்றான்.

* பூதப்பாண்டியன்- சிறந்த வீரன். புலவரைப்போற்றும் வள்ளல். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த பெண்பாற்புலவர். தனது கணவனின் மறைவுக்குப் பிறகு உடன்கட்டை ஏறினார்.
* ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்- சிலப்பதிகார நாயகன் கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கியவன். தவற்றை உணர்ந்ததும் உயிரை விட்டான்.
* தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்- தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் சேர, சோழ, குறுநில மன்னர்களின் கூட்டுப்படைகளை முறியடித்தவன். சிறந்த கொடைவள்ளல். மாங்குடி மருதனார் போன்ற புலவர்களை ஆதரித்து போற்றியவன்.
* கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் சேர, சோழ அரசுகளுடன் பாண்டிய அரசும் முடிவுக்கு வந்தது.
* அடுத்த மூன்று நூற்றாண்டுக் காலம் தமிழகம் களப்பிரர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP