கொடைவள்ளல் கரிகாலன்
பொது அறிவு- வரலாறு
சங்க கால தமிழ் அரசுகள்: சோழ அரசு(தற்போதைய தஞ்சை, திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கியது)
தலைநகரம்- உறையூர்
துறைமுகம்- காவிரிப்பூம்பட்டினம் (இரண்டாவது தலைநகரம்)சின்னம்- புலி
* காவிரிநதிப் பள்ளத்தாக்கில் இருந்ததால் நீர்வளமிக்க நாடு
* சோழநாடு, காவிரி நாடு, காவிரி சூழ்நாடு, நீர்நாடு, புனல்நாடு எனப் பெயர்கள் உண்டு
* கிள்ளி, வளவன், சென்னி, சோழன் என்ற பெயர்களால் மன்னர்களை அழைத்தனர்
* புகழ்மிக்க மன்னன்- கரிகாலன்
* பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை ஆகிய நூல்கள் கரிகாலன் குறித்து விவரிக்கின்றன
* சிறுவயதிலேயே பல வழக்குகளுக்கு தனது அறிவாற்றலால் தீர்ப்பு வழங்கியவன் கரிகாலன்
* வேளாண்மை, வணிக வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தான்
* காவிரியின் குறுக்கே கல்லணை அமைத்து நீர்ப்பாசன வசதியை பெருக்கினான்
* புகார் துறைமுகத்தை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தான்
புகார் வாணிப நகரமாக திகழ்ந்தது. அதனால் அயல்நாட்டு வணிகர் வருகை தந்தனர்
* புலவர்களை போற்றி ஆதரித்தான். அவனது கொடைத்தன்மையை பொருநராற்றுப்படை விளக்குகிறது
* கரிகாலனுக்குப் பிறகு நலங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன் போன்ற புகழ்மிக்க அரசர்கள் ஆட்சி செய்தனர்
* கோச் செங்கணான் காலத்துடன் சங்க கால சோழரின் ஆட்சி முடிவுக்கு வந்தது