இலவச வேலைப் பயிற்சி
வெளிநாட்டில் பராமரிப்பு மற்றும் அலுவலக வரவேற்பு உள்ளிட்ட பணிகளுக்கான மூன்று மாத கால இலவச பயிற்சி சென்னையில் அளிக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். இது மூன்று மாத பயிற்சி ஆகும். முதல் இரண்டு மாதங்கள் வகுப்பறைக் கல்வியும், ஒரு மாதம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.
இரண்டு நிலைகளிலும் 95 சதவீதம் வருகை புரிந்தவர்கள் மட்டுமே இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வேலைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். பராமரிப்புப் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பும், அலுவலக வரவேற்பு பயிற்சிக்கு பிளஸ் டூ தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு பயின்ற பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் கல்வித் தகுதி, இருப்பிடச் சான்று, ரேஷன் அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் 5 பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஆகியவற்றுடன் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு மூன்று நாள்களுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேல் விவரங்களுக்கு:
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், முதல் தளம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், 48, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20, (தொலைபேசி: 044-2446 4268, 2446 4269) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.