6 கோடி புதிய வாய்ப்புகள்
இந்தியாவில் வரும் 2012ஆம் ஆண்டுக்குள் 58மில்லியன் (5கோடியே 80லட்சம்) புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஹரீஸ் ராவத் தெரிவித்துள்ளார். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நிறைவு ஆண்டான 2012க்குள் விவசாயத்துறையில் இந்த புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தற்போது 37மில்லியன் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதாகவும், வேலையளிப்போர் தங்களது நிறுவனங்களின் காலிப் பணியிட எண்ணிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு தெரிவித்து தகுதியானவர்களை எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர்.